spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபல சீசன்களில் விளையாடும் அளவுக்கு தகுதியானவர் தோனி

பல சீசன்களில் விளையாடும் அளவுக்கு தகுதியானவர் தோனி

-

- Advertisement -

மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மகேந்திர சிங் தோனி மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவரை ரசிகர்கள் “நாம்ம தல தோனி” என்று அன்போடு அழைப்பார்கள். இவர் விளையாடும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

2023 ஐபிஎல் போட்டிக்காக மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டு தான் தோனியின் கடைசி ஐபிஎல் என பலரும் கூறிவருகின்றனர்.

we-r-hiring

பல சீசன்களில் விளையாடும் அளவுக்கு தகுதியானவர் தோனி

வாட்சன் உள்பட சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் தோனியின் பயிற்சியை பார்த்துவிட்டு இவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என கூறினர்.

இந்நிலையில் மகேந்திர சிங் தோனி இன்னும் 2-3 சீசன் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர் என்று கூறினார் ரோகித் சர்மா.

பல சீசன்களில் விளையாடும் அளவுக்கு தகுதியானவர் தோனி

மேலும், இதுதான் அவருக்கு கடைசி வருடம் என சொல்ல முடியாது. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என வலியுறுத்துகிறேன், என்று ரோகித் சர்மா கூறினார்.

MUST READ