Homeசெய்திகள்விளையாட்டுவெற்றிக்கு முக்கிய பங்காற்றிய துருவ் ஜுரோலுக்கு ஆட்டநாயகன் விருது!

வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய துருவ் ஜுரோலுக்கு ஆட்டநாயகன் விருது!

-

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த துருவ் ஜுரோல் ஆட்ட நாயக விருதை வென்றார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோரூட் 122 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜீரோல் 90 ரன்களும் ஜெய்ஸ்வால் 73 ரன்களும் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் காரணமாக இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களும், சுப்மன் கில் 53 ரன்களும், ஜுரோல் 39 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த துருவ் ஜுரோல் ஆட்ட நாயக விருதை வென்றார். துருவ் ஜுரோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 90 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 39 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக துருவ் ஜுரோலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

MUST READ