சிட்னி டெஸ்டின் தோல்வியுடன், கடந்த 7 ஆண்டுகளாக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இந்த தோல்வி ஒட்டுமொத்த இந்திய அணியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தோல்விக்கு பெரும்பாலான விமர்சனங்கள் ரோஹித் சர்மாவை சுற்றியே சுழல்கின்றன. முன்னாள் கேப்டன் விராட் கோலியும் இதில் தப்பிவில்லை. இந்த தொடர் முழுவதும் இவர்கள் இருவரது ஆட்டமும் மோசமான் ஃபார்மில் இருந்தனர். இந்த டெஸ்டோடு இந்திய அணியில் அவர்களது அத்தியாயம் முடிந்துவிட்டதா? என்பதை அனைவரும் அறிய ஆவலாகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


ஆனால், இந்தக் கேள்விக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக பதில் அளிக்காமல், எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் இல்லாமல் போனால், இந்திய அணி அணி என்னவாகும்? என உணர்த்தியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் போட்டியில் அவர்கள் இருவரும் சரியாக விளையாடததால் டெஸ்ட் அணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரோஹித் சிட்னி டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் விராட் தொடர்ந்து விளையாடினாலும் சாதிக்கவில்லை.
இந்நிலையில் சிட்னி டெஸ்ட் முடிந்த பிறகு, தலைமை பயிற்சியாளர் கம்பீர், “எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் எதுவும் கூற முடியாது. அது அவர்களைப் பொறுத்தது. நான் சொல்லக்கூடியதெல்லாம், மக்கள் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இன்னும் பேரார்வம் கொண்டார். இந்த வீரர்கள் பெரும் திறமைசாலிகள். அதேவேளை, அணியின் நலன்களை மனதில் வைத்திருப்பது முக்கியம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது அணியின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்று இருவர் குறித்தும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கம்பீரின் தலைமை பயிற்சியாளர் பதவியும் ஊசலாட்டத்தில்தான் உள்ளது.


