Homeசெய்திகள்விளையாட்டு19 ஓவரில் இலக்கை வென்ற குஜராத் அணி

19 ஓவரில் இலக்கை வென்ற குஜராத் அணி

-

19 ஓவரில் இலக்கை வென்ற குஜராத் அணி. குஜராத் அணி 2வது வெற்றியை கைப்பற்றியது. பாண்டிங் – கங்குலி இருந்தும் டெல்லி தோல்வி

ஐபிஎல் 2023 7வது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.

19 ஓவரில் இலக்கை வென்ற குஜராத் அணி

அணல் பரக்கும் ஆட்டத்தால் குஜராத் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றியை கைபற்றியது.

ஐபிஎல் டி20 2023 தொடரின் 7வது லீக் போட்டி டெல்லி அருண்ஜேட்லீ மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்ந்தெடுக்க, டெல்லி அணி ஓபன்னிங் இறங்கியது.

ஆட்டத்தில், இளம் வீரரான பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங்கை தொடங்கினர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே தடுமாறிக் கொண்டிருந்தனர்.

19 ஓவரில் இலக்கை வென்ற குஜராத் அணி

குறிப்பாக வார்னர், முதல் ஓவரை வீசிய முகமது ஷமியின் பந்தை எதிர்கொள்ள பெரும்பாடு பட்டார். அந்த ஓவரில் ஒரு பந்து ஸ்டம்பை தாக்கியபோதும் பெயில்ஸ் விழாததால் அவுட்டில் இருந்து தப்பித்தார்.

அடுத்து ஷான் மார்ஷ் விக்கெட்டை கைப்பற்றி டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக ஷர்ப்ஃராஸ் கான் 30 ரன்களும் இன்று அறிமுகமான அபிஷேக் போரல் 20 ரன்களும் மற்றும் அக்சர் பட்டேல் 36 ரன்களும் எடுத்தனர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

19 ஓவரில் இலக்கை வென்ற குஜராத் அணி

பின்னர், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது . அதிகபட்சமாக தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 61 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, இந்த தொடரில் தொடர்ச்சியாக பெற்ற 2வது வெற்றியாகும். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்திருந்தது.

MUST READ