spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜோக்கர் பட ஹீரோவின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

ஜோக்கர் பட ஹீரோவின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் குரு சோமசுந்தரத்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் ஜிகர்தண்டா, பாண்டியநாடு, கடல் ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

we-r-hiring

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜோக்கர்’ திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.

இதற்கிடையில் மலையாளத் திரையுலகிலும் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் சமீபத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் சிபு என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இவர் தற்போது மோகன்லால் இயக்கும் ‘பரோஸ்’ படத்திலும், இந்தியன் 2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழில், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் இந்த படம் சம்பந்தமான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

MUST READ