Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!

-

- Advertisement -

 

உலகக்கோப்பை இறுதிப் போட்டி- இந்திய அணி பேட்டிங்!
Photo: bcci

நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கியது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுச் செய்தார்.

“பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும்……”- மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

அப்போது பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை; முதலில் பேட்டிங் செய்யவுள்ள நிலையில், இந்திய அணி வலிமையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!

இதையடுத்து, இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. உலகக்கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் 13 முறை சந்தித்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா அணி 8 முறை வென்றுள்ளது. தோல்வியே பெறாமல் அனைத்துப் போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய அணி.

MUST READ