Homeசெய்திகள்விளையாட்டுஅயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி!

அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி!

-

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் அயர்லாந்து அணியானது பால் ஸ்டிர்லிங் தலையிலும் களம் கண்டது. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அயர்லாந்து அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆந்தரே பால்பிரின் 5 ரன்களிலும் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லார்கண் டக்கர் 10 ரன்களிலும் ஹரி டெட்டர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 1 ரன்களில் வெளியேற, மறுபுறம் எதிர்த்து ஆடிய ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்து ரிட்டயர்டு ஹெட் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 36 ரன்களிலும் சிவம் துபே ரன் ஏதுமின்றியும் களத்திலிருந்தனர். இறுதியில் அணியானது 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 97 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது .இந்திய அணியில் ஆட்டநாயகனாக 2 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

 

MUST READ