spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? - இன்று U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி

-

- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பைப் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

we-r-hiring

15வது ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் தோல்வி பெறாமல் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் லீக் ஆட்டங்களில் தோல்வி பெறாமல், அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள பெனோனி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50ஓவர் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதற்கு இந்தியாவில் இளம்படை பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

MUST READ