Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் – இங்கிலாந்து அணி தடுமாற்றம்

-

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியானது 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியானது இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் சதம் விளாச இந்திய அணி 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷிர் 5 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணியானது 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

MUST READ