Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி கணக்கை தொடங்குமா பெங்களூரு? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

வெற்றி கணக்கை தொடங்குமா பெங்களூரு? – பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

-

ஐபிஎல் 6வது லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. நேற்று முன் தினம் இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதேபோல் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மல்லுக்கட்டின. இப்போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. நேற்று மதியம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதேபோல் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 6வது லீக் போட்டியில் பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் சென்னை அணியுடன் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தனது வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி, அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ