- Advertisement -
களத்தில் ராக்கெட்டை அடித்து உடைத்த கஜகஸ்தான் வீரர்
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் போது கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் ராக்கெட்டை தரையில் அடித்து நொறுக்கியது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் சாதிக்க நினைத்த களம் புகுந்துள்ளார் கஜகத்தானை சேர்ந்த அலெக்சாண்டர் பப்ளிக்.

உலகத் தரவரிசையில் 49-வது இடத்தில் உள்ள இவர் ஸ்பெயின் நாட்டின் மார்ட்டினசை எதிர்த்து மோதினார். முதல் செட் ஆட்டத்தில் பேக் ஹேண்டில் முறைப்படி புள்ளி சேர்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதனால் விரக்தியில் ராக்கெட்டை தரையில் ஓங்கி அடித்து நொறுக்கினார்.

இதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். உடைத்து ராக்கெட்டை கேலரியில் இருந்த பார்வையாளர் சிறுவர்களிடம் தந்துவிட்டு அடுத்த ராக்கெட்டை எடுத்து ஆடினார். முடிவில் 6-3, 7-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றை பப்ளிக் எட்டினார்.


