3வது ஐபிஎல் லீக்கில் ஐதரபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில், கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியானது 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் குவித்தது. அணியின் அதிகபட்சமாக ஆந்தரே ரஸ்செல் 64 ரன்கள் குவித்தார். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் ஹென்றிச் கிளாசன் கடைசி வரை போராடியும் அணியானது 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 204 ரன்கள் எடுத்து நூழிலையில் கோட்டை விட்டது. அணியின் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 63 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.