பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியானது 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் குவித்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 11வது லீக் போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோ அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்ததாவது நடைபெற்ற இரண்டாவது போட்டியில், பஞ்சாப் அணியை பெங்களூர் அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விழ்த்தியது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணியானது 2 முறையும், பஞ்சாப் அணியானது 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியை பொறுத்தவரையில் லக்னோ அணியானது தனது முதல் வெற்றியை பெற போராடும். அதே சமயம் பஞ்சாப் அணியும் தனது இரண்டாவது வெற்றியை பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பந்து வீசவுள்ளது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 15 ரன்னிலும் குயின்டன் டிகாக் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய படிக்கல் 9 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் குருணால் பாண்டியா 23 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி அணியை 199 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் லக்னோ அணியானது 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் குவித்து பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.