லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 66 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 67வது லீக் போட்டி நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 67வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 4 வெற்றி 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 6 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில 7வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 4 முறையும் மும்பை அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே சமயம் லீக் ஆட்டத்தில் கடைசி போட்டியில் மோதும் இரு அணிகளும் தங்களது வெற்றியுடன் நடையை கட்ட முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.