Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு அதிர்ச்சி... ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சி... குண்டை தூக்குப்போட்ட பிசிசிஐ..!

இந்திய அணிக்கு அதிர்ச்சி… ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சி… குண்டை தூக்குப்போட்ட பிசிசிஐ..!

-

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பரபரப்பான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
Photo: ICC

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ஷமி உடல் தகுதியாக இல்லை. அவர் ஆஸ்திரேலியா செல்லமாட்டார் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

மீதமுள்ள 2 போட்டிகளில் விளையாட ஷமி அவுஸ்திரேலியா செல்வாரா? இல்லையா? என பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து வெளியேறினார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.

அதன் பிறகு அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடினார். ஆனால் தற்போது அவரது இடது முழங்காலில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான பந்துவீச்சு பணிச்சுமை காரணமாக இது நடந்தது.இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கணுக்கால் அறுவைச் சிகிச்சை நிறைவு!

34 வயதான முகமது ஷமி மத்திய பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் 43 ஓவர்கள் வீசினார். இதற்குப் பிறகு, சையது முஷ்டாக் அலி டிராபியின் 9 போட்டிகளிலும் பங்கேற்றார். இதுமட்டுமின்றி பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக ஷமி கூடுதல் பந்துவீச்சு பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டார். அதிக பந்துவீச்சு காரணமாக, அவரது முழங்காலில் மீண்டும் சிறிது வீக்கம் ஏற்பட்டது.

இருப்பினும் பிசிசிஐ மருத்துவக் குழு ஷமியை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஷமி எப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்பது குறித்து இன்னும் காலக்கெடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முகமது ஷமி இந்திய அணிக்காக இதுவரை 64 டெஸ்ட், 101 ஒருநாள், 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 229 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 195 விக்கெட்டுகளையும், டி20யில் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

MUST READ