- Advertisement -
இன்றைய ஆட்டத்தில் மும்பை – குஜராத் மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலமான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன.

இந்த ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த அணி 11 போட்டிகளில் 8 இல் வெற்றி பெற்றுள்ளது.
நான்காம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் 6ல் வெற்றியும் 5ல் தோல்வியும் அடைந்துள்ளது.

போட்டியில் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற தீவிர முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


