பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ரொமேனியாவை எதிர்கொண்டது.
இப்போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா அடங்கிய இந்திய அணி 3-2 என்ற ஆட்டக் கணக்கில் ரோமானிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
குறிப்பாக மனிகா பத்ரா 2 ஒற்றையர் ஆட்டங்களில் வென்ற நிலையில், ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா இணை இரட்டையர் பிரிவில் அசத்தியது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் டேபிள் டென்னிஸில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்