spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி!

பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி!

-

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங்கில் 182 ரன்கள் எடுத்துள்ளது.

we-r-hiring

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 23வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. மொகாலியில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 23வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், ஐதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியுடம் அடைந்து அந்த அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

இதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 4 போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி கடைசியா குஜராத் அணியுடன் மோதிய நிலையில், அந்த போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. இரண்டு அணிகளும் சரி சமமான வெற்றி தோல்வியுடன் உள்ள நிலையில், 3வது வெற்றியை பெற இரண்டு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ரன்களும் அபிஷேக் ஷர்மா 16 ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஏய்டன் மார்க்ராம் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

 

 

 

 

MUST READ