Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

-

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். அவருக்கு வயது 82. பீலேவின் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. அப்போது பெருங்குடலின் வலது பக்கத்தில் ‘கேன்சர்’ கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

pele

உடனடியாக ஆப்பரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட பீலே, சமீபத்தில் பிரேசிலின் சாவ் பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ‘கேன்சர்’ சிகிக்கைக்காக ‘கீமோதெரபி’ சிகிச்சை தரப்பட்டது. ஆனால், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட பீலேவின் உயிர் பிரிந்த்து.

பிரேசில் கால்பந்து ஜாம்பவானான பீலே, மூன்று முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர். அதாவது 1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளில் கோப்பை வென்ற அணியில் இருந்தவர். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். பீலேவின் மரணத்திற்கு விளையாட்டு ரசிகர்கள், உலக தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ