spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமேக்ஸ்வெலின் 'மேக்ஸிமம்' சாதனை- குவியும் பாராட்டு!

மேக்ஸ்வெலின் ‘மேக்ஸிமம்’ சாதனை- குவியும் பாராட்டு!

-

- Advertisement -

 

மேக்ஸ்வெலின் 'மேக்ஸிமம்' சாதனை- குவியும் பாராட்டு!
Photo: ICC

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நோக்கி விளையாடும் போது, இரட்டை சதம் விளாசி ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

we-r-hiring

‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. 292 ரன்களே ஆஸ்திரேலியா அணி, உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் எட்டிப் பிடித்த அதிகபட்ச வெற்றி இலக்காகும்.

இதற்கு முன்பாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 1999- ஆம் ஆண்டு 287 என்ற இலக்கை எட்டி, ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகளில் ஏழாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், கம்மின்ஸ் இணை இந்த போட்டியில் எடுத்த 202 ரன்களே மிக அதிகம்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில், பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடும் போது, இலக்கை நோக்கி விளையாடி இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மேக்ஸ்வெல். உலகக்கோப்பையில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும், அதிவேகமாக இரட்டை சதம் விளாசியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்து மேக்ஸ்வெல் அடித்துள்ளார்.

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ்!

ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்துள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் 43 சிக்ஸர்களுடன் மேக்ஸ்வெல் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

MUST READ