Homeசெய்திகள்விளையாட்டுபேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் - சென்னைக்கு 142 ரன்கள் இலக்கு

பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் – சென்னைக்கு 142 ரன்கள் இலக்கு

-

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 60 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 61வது லீக் போட்டி நடைபெறுகிறது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் 61வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது.

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், போக போக விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய சிம்ரஜீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

MUST READ