spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி

-

- Advertisement -

இளைஞர்களும் , மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்குரிய மைதான வசதி குறித்து, விளையாட்டுதுறை அமைச்சரிடம் முறையிடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஷ்வின் கூறியுள்ளார்.

22 யார்ட்ஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் கோடை கால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால் அங்கு கிடைக்கும் வசதிகள், இந்தியாவில் இல்லை என்றார்.

we-r-hiring

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்

நகர்ப்புறத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்கள் குறைந்து உள்ள நிலையில், கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவில் விளையாட வருவதாக அஷ்வின் தெரிவித்தார்.

தற்போது அகாடமிகள் மூலம் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் அனைத்து பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளதென குறிப்பிட்ட அவர், கிராமப்புறங்களில் இருந்து சிறுவர்ககளை விளையாட அழைத்து வர அனைத்து  நடவடிக்கைகளையும் தங்களது அகடமி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு உரிய மைதான வசதிகள் குறித்து, விளையாட்டுதுறை அமைச்சரிடம் முறையிடுவேன் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூறினார்.

ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை. கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை என்றும் அது Game of skill.ஆகையால் அதைச் சூதாட்டம் என்றால் ”இல்லை என்று தான் கூறுவேன்” என்று அஷ்வின் தெரிவித்தார்.

 

MUST READ