spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுவிக்கெட் கீப்பரின் முதுகில் குத்திய ரோஹித் சர்மா... மைதானத்தில் பரபரப்பு

விக்கெட் கீப்பரின் முதுகில் குத்திய ரோஹித் சர்மா… மைதானத்தில் பரபரப்பு

-

- Advertisement -

மனுகா ஓவலில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாளில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இளம் சக வீரர் சர்ஃபராஸ் கானை முதுகில் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.|

ரிஷப் பந்திற்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கிய சர்ஃபராஸ், ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பந்துவீச்சைப் பிடிக்கத் தவறிவிட்டார். அதற்காக ரோஹித் சர்மா நகைச்சுவையாக முதுகில் குத்தினார்.

we-r-hiring

இந்த சம்பவம் இன்னிங்ஸின் 23 வது ஓவரில் ஜாக் கிளேட்டன் அவுட்டாவதற்கு முன்பு பேட்டிங் செய்து கொண்டு இருந்த ஆலிவர் டேவிஸிடம் ஹர்ஷித் ராணா ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார். பந்து கிளேட்டனை கடந்து, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த சர்ஃபராஸ் பந்தைப் பிடிக்காமல் விட்டு விட்டார். பந்து தரையில் விழுந்தது. அதை எடுக்க சர்பராஸ் கீழே குனிந்தபோது ரோஹித் அவரது முதுகில் பலமாக குத்தினார். ஆனாலும் இருவரும் சிரித்துக் கொண்டனர்.

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், பெர்த்தில் நடந்த முதல் இன்னிங்சில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான போதிலும், இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

MUST READ