20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 135 ரன்கள் எடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 50வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ராம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. கைல் மேயர்ஸ் 35 ரன்களும் சாய் ஹோப் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் 135 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் தப்பிரைஸ் சம்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தற்போது வரை அணியானது 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்து 15 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.