Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் இலங்கைVSஇந்தியா அணிகள் இன்று பலப்பரீட்சை

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் இலங்கைVSஇந்தியா அணிகள் இன்று பலப்பரீட்சை

-

- Advertisement -

ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கைVSஇந்தியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

9வது ஆசியக்கோப்பை மகளிர் டி20 தொடரானது இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியில் இந்திய அணியானது ஹர்மர்ன்பிரீத் பவுர் தலைமையிலும், இலங்கை அணியானது சமாரி அட்டப்பட்டு தலைமையிலும் களம் காண்கின்றன. இப்போட்டியானது இலங்கை தம்புல்லா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ளது. இலங்கை அணியானது 5 முறை இறுதிப்போட்டிக்கு சென்று 5முறையும் இந்திய அணியிடமே தோல்வியடைந்துள்ளது. தற்போது இலங்கை அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

MUST READ