இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி பல்லகெலேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலும் களம் காண்கின்றன. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று 3வது டி20 போட்டி நடைபெறுகிறது. கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் அதே சமயம் இந்திய அணியானது தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.