உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக தயாராகவில்லை என புகார் எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை ( அக்-5)ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடரானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. அந்தவகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மைதானங்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்னும் மைதானங்கள் தயாராகவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடரின் போதே ஹைதராபாத் உப்பால் மைதானத்தில் இருக்கைகள் சேதமடைந்திருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. தற்போது உலகக் கோப்பை போட்டிக்காக இந்த மைதானம் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இருக்கைகள் மாற்றப்படவில்லை எனவும், தற்காலிகமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.
மைதானத்தில் சுற்றிவரும் புறாக்களின் எச்சங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், ரசிகர்கள் அந்த இருக்கைகளில் அமர முடியாத சூழல் இருந்து வருகிறது. இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் வெங்கடேஷ் வெளியிட்டு விமர்சித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் முழுமையாக தூய்மை படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
This video is for those doubting thomoses who felt my earlier pics were edited. pic.twitter.com/xmC5ti9hCm
— C.VENKATESH (@C4CRICVENKATESH) October 3, 2023