டி 20 கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசினார் சூர்யகுமார்
குஜராத்க்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சூர்யகுமார் அதிரடி சதம் அடித்து மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களான இஷான் கிஷன் 31 ரன்களிலும், ரோஹித் சர்மா 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் பொறுப்புடன் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
சூர்யகுமார் 49 பந்துகளில் 103 ரன்கள் விளாச மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு விரித்திமான் சாகா, சுப்மான் கில், கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
டேவிட் மில்லர் 41 ரண்களும், விஜய் சங்கர் 29 ரண்களும் எடுத்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். கடைசி கட்டத்தில் மும்பை பந்துவீச்சை நான்கு பக்கமும் சிதறவிட்டார் ரஷித் கான். அவர் 32 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் விளாசினார்.
இருப்பினும் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பை 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.