Homeசெய்திகள்விளையாட்டுபஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது

பஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது

-

பஹ்ரைனில் சர்வதேச கார் பந்தயம் தொடங்கியது

பஹ்ரைன் பார்முலா-1 கார் பந்தயத்தில், பெல்ஜியத்தின் ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று, 2023-ம் ஆண்டின் சர்வதேச F-1 தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளார்.

உலகின் மிகப்பெரிய பரிசுத்தொகை கொண்ட பார்முலா-1 கார் பந்தயம், 2023-ம் ஆண்டில் மொத்தம் 23 சுற்றுகள் நடத்தப்படுகிறது. இதில் நடப்பாண்டு அட்டவணைப்படி, பஹ்ரைனில் முதல் சுற்றுப் போட்டி தொடங்கி, அபுதாபியில் 23-வது சுற்றோடு நிறைவடைகிறது. இந்நிலையில், SAKHIR நகரில் நடைபெற்ற பஹ்ரைன் பார்முலா-1 கார் பந்தயத்தில், 300 கிலோ மீட்டர் பந்தய தொலைவை கடக்க முன்னணி வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். அவர்கள் காற்றைக் கிழித்து கொண்டு, வளைவு நெளிவான பாதையில் சென்றதை நாற்காலியின் நுனியில் அமர்ந்து ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

இறுதியில் நடப்பு சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், 1 மணி நேரம் 33 நிமிடங்கள் 56 நொடிகளில் முதலாவதாக கடந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரை விட 11.9 நொடி பின்தங்கி வந்த மெக்சிகோவின் செர்ஜியோ பெரெஸ் 2-வது இடம் பிடித்தார். 26.43 வினாடி தாமதமாக வந்த ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சோ 3-வது இடம் பிடித்தார்.

இறுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி வீரர்கள் ஷாம்பெயின் மதுபானத்தை ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

MUST READ