Homeசெய்திகள்விளையாட்டுவெற்றியை தக்க வைக்க போகும் அணி எது? RR vs PBKS

வெற்றியை தக்க வைக்க போகும் அணி எது? RR vs PBKS

-

IPL 8வது லீக் ஆட்டத்தில் RR vs PBKS -வெற்றியை தக்க வைக்க போகும் அணி எது?

2023 ஐபிஎல் டி20, 8வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) குவாஹாட்டியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஏப்ரல் 5, புதன்கிழமை) நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களுக்கு முன்னேறும் என்பதால் இன்று ஆட்டம் அணல் பரக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வெற்றியை தக்க வைக்க போகும் அணி எது? RR vs PBKS

குவாஹாட்டியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக்(IPL) போட்டியை நடத்துகிறது.

ஐபிஎல் 2023 இன் 8வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் (PBKS) அணிகள் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் களமிறங்க உள்ளன.

இந்த சீசனில் இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், அந்த வெற்றிப் பயணத்தைத் தொடர வேண்டும் என இரு அணியின் கேப்டன்களும் விரும்புகிறார்கள்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றியை தக்க வைக்க போகும் அணி எது? RR vs PBKS

அதேபோல பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (KKR) எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதி முறைப்படி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் ஒரு இடம் பிடிக்கும்.

MUST READ