spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணியை வீழ்த்தியது ஜிம்பாவே அணி

இந்திய அணியை வீழ்த்தியது ஜிம்பாவே அணி

-

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹரரே மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து ஜிம்பாவே அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வெஸ்லே மாதவெரெ 21 ரன்களிலும் இன்னாசெண்ட் கையா ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரைன் பெனட் 22 ரன்களிலும் சிக்கந்தர் ராசா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் 115 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா ரன் ஏதுமின்றியும் சுப்மான் கில் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 7 ரன்களிலும் ரியான் பராக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் சிக்கந்தர் ராசா மற்றும் டெண்டை காட்டரா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். ஜிம்பாவே அணியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜிம்பாவே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாவே அணி முதலாவது வெற்றியை பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

MUST READ