Homeசெய்திகள்தமிழக முதல்வரின் "போதை இல்லா தமிழகம்" :தீவிர சோதனை: 2 கிலோ 100 கிராம் கஞ்சா...

தமிழக முதல்வரின் “போதை இல்லா தமிழகம்” :தீவிர சோதனை: 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்:

-

பட்டரவாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது:

தமிழக முதல்வரின் “போதை இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தலின்படி, ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் செங்குன்றம் காவல் துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், திருமுல்லைவாயல், ஆகிய பகுதிகளில் தீவிர கஞ்சா வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பட்டரவாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள  ஆட்டோ ஸ்டாண்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு அடையாளம் தெரியாத நபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். பின்னர் போலீசார் அந்த நபரை அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த நபர் வைத்திருந்த பையில் கஞ்சாவை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பட்டரவாக்கம்  ரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது:
செபி

மேலும் அவரை விசாரித்ததில் கேரள மாநிலம் கருவன்னூர்  கிராமத்தை சேர்ந்த செபி (26) என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கேரளாவில் இருந்து கஞ்சா கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது நேற்று கஞ்சா வழக்கு பதியப்பட்டு அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

MUST READ