spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்றும், நாளையும்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 210 பேருந்துகளும், நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - தொழிற்சங்க கூட்டமைப்பு

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 35 பேருந்துகளும், நாளை மற்றும் நாளை மறுநாளும் சிறப்பு பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து இன்றும், நாளையும்  110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ