spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில் மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில் மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

-

- Advertisement -

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் கடலில் மூழ்கி மாயமான ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிகையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சென்று மூக்கையா, முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 பேரும் கடந்த 1ஆம் தேதி அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில், விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் மற்றும் மூக்கையா, முனியாண்டி ஆகியோர் இலங்கை கடற்படையினரால் கடநத 3ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டனர்.

we-r-hiring

மேலும், மீன்பிடி விசைப்படகு மூழ்கியதில் காணாமல் போன ராமச்சந்திரன் என்பவரை இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் கடந்த 5 நாட்களாக தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இச்சம்பவத்தில் கடலில் மூழ்கி காணாமல் போன ராமச்சந்திரன் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

MUST READ