spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தருவோம் - TANGEDCO

நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தருவோம் – TANGEDCO

-

- Advertisement -

TNEB - தமிழ்நாடு மின்சார வாரியம்

பெற்றோர், ஆசிரியர், அனைவரும் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தர தருவோம் என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், இந்த விடுமுறை காலங்களில் ‘மின் பாதுகாப்பு’ பற்றி பள்ளி சிறார்களுக்கு சொல்லி தருவோம்.
கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவது தவிர்க்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டால், மேலே மின் கம்பி, மின் கம்பம் அருகே செல்லக்கூடாது.
பூங்காக்கலிலோ, பொது இடத்திலோ விளையாடும் போது, மின் கேபிள், வயர், மின் பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ தொடவோ கூடாது. விளையாடும்போது பெரியோர் மேற்பார்வை வேண்டும்.

ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம். TANGEDCO வும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெற்றோர், ஆசிரியர், அனைவரும் இணைந்து நமது பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித்தர தருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ