Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??" - டி.கே.எஸ் இளங்கோவன்...

“இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??” – டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி

-

- Advertisement -

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் காரணமாகவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்தியாவை மோடி ஆள்கிறாரா? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா?” என கேள்வி எழுப்பினார். "இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??" - டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

we-r-hiring

அப்போது பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதன் பின்னணியில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஒன்றிய பாஜக அரசு நிறுத்தியதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக இந்தியா பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், பெட்ரோல் விலை உயர்வுக்கும் அதுவே முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார். மேலும், “இந்தியாவை பிரதமர் மோடி ஆளுகிறாரா அல்லது டொனால்ட் டிரம்ப் ஆளுகிறாரா?” என கேள்வி எழுப்பினார்."இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??" - டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி

அதிமுகவுடன் திமுக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என திட்டவட்டமாக மறுத்த அவர், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜயின் கட்சிக்கு ஆதரவு அளிக்காத சூழலில், சிலர் அரசியல் கணக்கீட்டின் அடிப்படையில் ஆதரவு தெரிவித்ததாக விமர்சித்தார். இது தொடர்பாக ஆதாவ் அர்ஜுனாவின் கருத்துகள் வெறும் கற்பனை எனவும் குறிப்பிட்டார்.

"இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??" - டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி

மேலும், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய அவர், தற்போதைய அதிமுக நிலைமை எடப்பாடி பழனிச்சாமி வலிமையற்ற தலைவர் என்பதை நிரூபிப்பதாக கூறினார். தலைமைத்துவத்தின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லாததால் தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தலைமைப் பண்பில்லாதவர் என்பதையே தற்போதைய அரசியல் சூழல் காட்டுவதாகவும் விமர்சித்தார்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பேசிய அவர், விமான நிலையம் அமைப்பது ஒன்றிய அரசின் முடிவு என்றும், அதற்கான நிலங்களை வழங்குவது மாநில அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்திலேயே பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழக மகளிருக்கு மாதம் ரூ.2500? கோட்டையில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

MUST READ