தவெக வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 
தமிழகத்தில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவர் விஜய், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் எனத் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக அறிவித்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அமல்படுத்துவது குறித்துத் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் அவசர மற்றும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
யார் யாருக்குக் கிடைக்கும்? (எதிர்பார்க்கப்படும் தகுதிகள்)
இதுவரை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை விதிகளின்படி, இந்த ரூ.2,500 திட்டத்திற்கும் பின்வரும் தகுதிகள் அடிப்படையாக இருக்கலாம் என அரசியல் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேஷன் கார்டில் (குடும்ப அட்டை) குடும்பத் தலைவியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கு முன்னுரிமை. 21 வயது பூர்த்தியடைந்த மகளிர் இந்த உதவித்தொகையைப் பெற தகுதியானவர்கள். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கருக்குக் குறைவான நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவான புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள். குடும்பத்தில் சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் (கார், ட்ராக்டர் போன்றவை) இல்லாதிருக்க வேண்டும்.
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதுடன், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவ்வளவு பெரிய தொகையை அரசுப் பொக்கிஷத்திலிருந்து வழங்குவது சாத்தியமா? நிதி நெருக்கடியைக் கையாள்வது எப்படி? என்பது குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்ததாகத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அரசாணை மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகப் பெண்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Comp Off-க்கு எதிராக வெடித்த கலகக்குரல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் பெண் ஊழியரின் குமுறல்!
