மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் மே 2026 மாதத் தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வ அறிப்பு ஒன்றை அறிவித்துள்ளாா்.
அதில், இத்திட்டத்தின் நடைமுறை செயல்பாடுகளில் சில மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், அதற்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயனாளிகள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் மே மாதத்திற்கான தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையில் அதிரடி மாற்றம் – 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
