Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய அலோசனை…

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய அலோசனை…

-

- Advertisement -

சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முததமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய அலோசனை…ல்வர் முக்கிய அலோசனை…

தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் மதுபான கடைகளில் விற்பனை முறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரைவில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து, மாநிலத்தில் பல்வேறு துறைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கை மேம்படுத்துதல், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னுரிமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

we-r-hiring

அதேபோல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” சிறப்பு திட்டம், போதைப் பொருள் தடுப்புக்காக தனி தடுப்பு படை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் முதலமைச்சரின் முதல் கட்ட முயற்சிகளாக முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தினசரி தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி பல்வேறு துறைகளில் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, விரைவில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை, குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கைகள், குற்றங்களை தடுக்கும் புதிய உத்திகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குதல், பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். அதேசமயம், அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம் – பொதுச்செயலாளர் அதிகாரம் குறித்து கே.பி.முனுசாமி விளக்கம்

MUST READ