Homeசெய்திகள்தமிழ்நாடு"10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?”- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு சரமாரி கேள்வி!

வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் நாளை (நவ.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

நவம்பர் 22- ஆம் தேதி அன்று தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், நவம்பர் 22- ஆம் தேதி மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ