
“தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

அனிமல் திரைப்படத்தின் ரன்னிங் டைம் வௌியீடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று (நவ.20) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா தவறாக இருந்தாலும், அதனை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஒவ்வொரு நிபந்தனையையும் மீறி இருக்கிறார். மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் ஆலோசனை படி, ஒரு ஆளுநர் செயல்பட வேண்டும். ஏற்கனவே, அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திருப்பி அனுப்புவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆளுநருக்கு உள்ள துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பறிக்க மாநில அரசு முயற்சி செய்கிறது. மசோதாக்களுக்கு அப்படியே ஒப்புதல் அளிக்க முடியாது; பரிசீலித்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். மசோதாக்களுக்கு மறைமுகமாக ஒப்புதல் பெற முயலும், இது போன்ற மனுக்களை அனுமதிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.
தளபதி 68 படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு நிறைவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, “உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன? நவம்பர் 10 – ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த நிலையில், 13- ஆம் தேதி மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்? என கேள்வி எழுப்பிய அமர்வு, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 01- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.