திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் .
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் என மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3699 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 17 லட்சத்து 5 ஆயிரத்து 287 பேரும், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 52 ஆயிரத்து 462 பேரும் மாற்று பாலினத்தவர்கள் 775 பேரும் என மொத்தம் 34 லட்சத்து 58 ஆயிரத்து 524 பேர் உள்ளனர்.
அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4,74744 பேரும், குறைந்தபட்சமாக பொன்னேரியில் 2,62680 வாக்களார்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்களை விட 47 ஆயிரத்து 175 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் 1.1.2025 ஆம் தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பேசிய 6ஏ-ம்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வடிவம் 6-பி.யும், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள் முகவரி மாற்றம் மற்றும் தொகுதி மாற்றம் ஆகியவற்றிற்கு படிவம் 8-ம் தங்களது குடியிருப்புக்கு அருகில் நியமிக்கப்பட்டுள்ள இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் இன்று 29.10.24 முதல் வருகிற 28.11.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும், மற்றும் சிறப்பு முகாம் நடைபெறும் நவம்பர் மாதம் 16.17. 23. 24. ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் http://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.