நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி எம்.பி., ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், அவரது செயல்பாடுகள் மீதான அதிருப்தி காரணமாகவும் அக்கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். அண்மையில் நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்த வழக்கறிஞர் வினோத்குமார், அக்கட்சியிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி, நாமக்கல் கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஸ்குமார் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு ராஜேஷ்குமார் எம்.பி., சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும், அனைவருடனும் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாநகராட்சி மேயர் து.கலாநிதி உடனிருந்தனர்.