spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு11 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

11 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo: TN Govt

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

நகைச்சுவை நடிகர் அர்ஜூனனுக்கு 3-வது குழந்தை பிறந்தது

அதன்படி, கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்வர் தயால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா, திண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்த பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்கு மொழிகளில் வெளியானது ‘கூச முனுசாமி வீரப்பன்’

டிஎன்பிஎல் நிறுவனத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக ஐ.பி.எஸ். அதிகாரி அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி தமிழ்ச்சந்திரன், சென்னை கிழக்கு மாவட்ட சட்டம்- ஒழுங்கு காவல் இணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி தர்மராஜன், டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ