spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதந்தை வாங்கிய கடனுக்கு 11 வயது மகள் கடத்தல்! முத்தூட் நிறுவனம் அடாவடி

தந்தை வாங்கிய கடனுக்கு 11 வயது மகள் கடத்தல்! முத்தூட் நிறுவனம் அடாவடி

-

- Advertisement -

தந்தை வாங்கிய கடனுக்கு 11 வயது மகள் கடத்தல்! முத்தூட் நிறுவனம் அடாவடி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் தந்தை வாங்கிய கடனுக்காக 11 வயது மகளை கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தந்தை வாங்கிய கடனுக்காக மகளை கடத்தி சென்ற ஊழியர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மருதூரைச் சேர்ந்த வனத்துராஜா என்ற கூலி தொழிலாளி, கீரனூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் (முத்தூட்) கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்த பணத்தை மாதம் 2500 ரூபாய் என்ற தவணை முறையில் மாதம் மாதம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகை 2500 கூலி தொழிலாளி வனத்துராஜாவால் கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

we-r-hiring

பணத்தை குறித்த காலத்தில் கட்ட முடியாத நிலையில், பணம் வசூலிக்க நேற்று வனத்துராஜாவின் வீட்டிற்கு நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ் என்பவர் சென்றுள்ளார். வீட்டில் வனத்துராஜா இல்லாத நிலையில் அவரது 11 வருவது வயது மகள் ஜனனியை நிதி நிறுவன அலுவலகத்திற்கு கடத்திச் சென்று பின்பு வனத்துராஜாவை தொடர்பு கொண்டு கடன் தவணைத் தொகையை கட்டினால் அவரது மகளை விடுவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவன ஊழியர்

இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துராஜா இது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் நிதி நிறுவன ஊழியர் விக்னேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

MUST READ