spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

-

- Advertisement -

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் உள்ளிட்ட 4 பேரும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

we-r-hiring

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க ஆளுநர் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதனை தொடர்ந்து, இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அவர் முன்பு வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.  அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறையும், அமைச்சர் ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்  துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், அமைச்சர் சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துகொண்டனர். பின்னர் ஆளுநர் அளித்த தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

MUST READ