Homeசெய்திகள்தமிழ்நாடு12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

12 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

-

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது தற்போது சென்னையிலிருந்து சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 12 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை காலை கரையை கடக்ககூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ