Homeசெய்திகள்தமிழ்நாடு"128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

“128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

-

 

சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையில் ரயில் நிலையங்களில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகளிடம் குறைகளைக் கேட்டு நிவர்த்திச் செய்ய பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

மேலும், முக்கிய ரயில் நிலையங்களில் 548 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கடற்கரை, வேளச்சேரி மார்க்கம் உள்பட128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ