Homeசெய்திகள்தமிழ்நாடு"110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு"- தமிழக அரசு அறிவிப்பு!

“110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு”- தமிழக அரசு அறிவிப்பு!

-

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து வரும் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பதவி உயர்வு அளிக்கும் போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினைப் பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும் படி தீர்ப்புரை வழங்கியது.

உச்சநீதிமன்ற வழங்கிய ஆணையின் படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலில் பணி மூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணைகளின் படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!

மேலும் 2022- ஆம் ஆண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ