Homeசெய்திகள்தமிழ்நாடு"14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

-

 

"14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி! "மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?" என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. சார்பில் நல்லதம்பியை ஆதரித்துப் பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, "மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? நீட் தேர்வைக் கொண்டு வந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே இன்றைக்கு அதனை ரத்து செய்வோம் என்று சொல்கிறது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க. கூட்டணியின் 38 எம்.பி.க்கள். தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகள் தேசிய அளவில் மட்டுமே யோசிப்பதால் கூட்டணி வைக்கவில்லை. ஆட்சி, அதிகாரத்துக்கு அ.தி.மு.க. என்றைக்கும் அடி பணிந்தது கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

“மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘புஷ்பா 2’ டீசர் குறித்த அறிவிப்பு!

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. சார்பில் நல்லதம்பியை ஆதரித்துப் பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, “மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?

மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்….எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘புஷ்பா 2’ பட புதிய போஸ்டர்!

நீட் தேர்வைக் கொண்டு வந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளே இன்றைக்கு அதனை ரத்து செய்வோம் என்று சொல்கிறது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க. தான். தி.மு.க. கூட்டணியின் 38 எம்.பி.க்கள். தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகள் தேசிய அளவில் மட்டுமே யோசிப்பதால் கூட்டணி வைக்கவில்லை. ஆட்சி, அதிகாரத்துக்கு அ.தி.மு.க. என்றைக்கும் அடி பணிந்தது கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ